நாங்கள் யார்
இலங்கை அணுசக்தி சபை (யுநுடீ) என்பது மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் கீழ் செயற்படுகின்ற ஒரு சட்டரீதியான அமைப்பாகும், இது 2014 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை அணுசக்தி சட்டத்தினால் நிறுவப்பட்டது. கதிர்வீச்சு மற்றும் கதிரியக்க தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில்; பரவலாக பயன்படுத்தப்படுவதுடன் இலங்கையில் மருத்துவ, விவசாய, கைத்தொழில், எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் துறைகளின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை இதனால் வழங்க முடிகின்றது. இலங்கையில் மேற்கூறிய துறைகளில் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு வசதி செய்யும் பொறுப்பு அணுசக்தி சபைக்கு (யுநுடீ) உள்ளது.
அணுசக்தி தொழில்நுட்பத்தின் அமைதியான பயன்பாடுகள் தொடர்பான நடவடிக்கைகளுக்காக, பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், தேசிய சம்பந்தம் மற்றும் சர்வதேச அங்கீகாரத்திற்கு முக்கியத்துவம் அளித்தும், அதற்கான தலைசிறந்த நிலையமாக இருத்தல்.
அணுசக்தி தொழில்நுட்பத்தின் அமைதியான பயன்பாடுகளை ஊக்குவித்தல், தூண்டுதல் மற்றும் அதன் நன்மைகளை நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்தும் அதேவேளை பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் தரத்தை உறுதிசெய்தல்
மற்றும்,
தேவையற்ற அயனியாக்கல் கதிர்வீச்சு விளைவுகளிலிருந்து தொழிலாளர்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு வசதியாக கதிர்வீச்சு பாதுகாப்பு சேவைகளை வழங்குதல்.