Sri Lanka Atomic Energy Board

Sinhala (Sri Lanka)English (United Kingdom)
Get sinhala unicode font  Get tamil unicode font
Sitemap
FAQ Contact Us
முதற்பக்கம் எமது பணி மனித வளங்களும் சர்வதேசப் பிரிவும்

மனித வளங்களும் சர்வதேசப் பிரிவும்

அஸ்ரியா, வியன்னாவில் உள்ள சர்வதேச அணுசக்தி முகவராண்மைக்கான ஒரு குவியப்புள்ளியாக அ.ச.அ. தொழிற்படுகின்றது. அணு விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பம் மற்றும் அதன் அமைதியான பிரயோகங்கள் என்ற களத்தில் எவ்வாறு அறிவு மற்றும் தொழில் நுட்பத்தை பகிர்ந்து கொள்வது என்ற சர்வதேச ஒத்துழைப்பால் அத்துடன் IAEA உறுப்பினர் நாடுகளுக்கு இடையே அது என்ன வகிபங்கை வகிக்கிறது என்பது நன்கு அறியப்பட்ட ஒன்றாக உள்ளது. சமூக, பொருளாதார அபிவிருத்திக்காக தொழில்நுட்ப உதவியை பெற்றுக் கொள்வதற்காக IAEA தொழில்நுட்ப ஒத்துழைப்பு நிகழ்ச்சித் திட்டத்தில் அ.ச.அ. பங்குபற்றுகின்றது. பங்குபற்றுவதைக் காட்டிலும் IAEA நிகழ்ச்சித்திட்ட ஒத்துழைப்புடன் கொரிய குடியரசு (KOICA, RCARO) ஜப்பான் (MEXT, NIRS) நிகழ்ச்சித்திட்டம் மற்றும் இந்தியர் பாகிஸ்தான் என்பவற்றுடனான ஒத்துழைப்பும் உயர்த்திக்காட்டப்படுகின்றது.

நாட்டின் சமூக, பொருளாதார அபிவிருக்காக அணுசக்தி விஞ்ஞான மற்றும் தொழில் நுட்பவியலை அமைதியான முறையில் பயன்படுத்தும் இந்தச் செயற்பாட்டில் சர்வதேச ஒத்துழைப்பும் உள்ளது.

IAEA TC நிகழ்ச்சித்திட்டம்

சர்வதேச அணுசக்தி முகாவராண்மை தொழில்நுட்ப உதவிகளை அதன் உறுப்பு நாடுகளுக்கு அனுபவிக்கக்கூடிய சமூக பொருளாதார நிலையைப் பெற்றுக் கொள்வதற்காக நேரடியாகவும் அணுத்தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியும் பெற்றுக் கொள்வதற்கும் தொழில் நுட்ப உதவிகளை வழங்குகின்றது. விவசாயம், சுகாதாரம், கைத்தொழில், சுற்றாடல் போன்ற துறைகளில் நிலைத்து நிற்கக்கூடிய பெரும் அபிவிருத்திகளின் முன்னுரிமைகளுக்கான அணுத்தொழில் நுட்பத்தை வழங்குவதன் ஊடாக இச்சேவைகளை வழங்குகின்றது.

அ.ச.அ.வானது தொழில்நுட்ப ஒத்துழைப்பு நிகழ்ச்சித் திட்டங்களை திட்டமிடுதல் கண்காணித்தல் என்பவற்றை நடைமுறைப்படுத்துவதில் சம்பந்தப்படுகின்றது. அ.ச.அ. பின்வரும் தொழில்நுட்ப கருத்திட்டங்களை 2009/2010 இல் அறிமுகப்படுத்துவதையும் ஒருங்கிணைக்கின்றது.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேசிய ஒத்துழைப்பு கருத்திட்டங்கள்

RCA NR

திரு. விக்ரமநாயக்க இலங்கையின் RCA தேசிய பிரதிநிதியாக செயற்படுகின்றார். திரு. விக்கிரமநாயக்க 1981 இல் அச.அ.வில் இணைந்தார், அப்போதிருந்து அவர் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் பல RCA கருத்திட்ங்களில் சம்பந்தப் பட்டுள்ளார்.

 

 

RCA தேசிய இலங்கைப் பிரதிநிதி
திரு. D.G.L விக்ரமநாயக்க
தொலைபேசி :
+94 11 2533427-8
தொலைநகல் :
+94 11 2533448
மின்அஞ்சல் :
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

திங்கட்கிழமை, 22 ஜூன் 2015 08:38 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது