Sri Lanka Atomic Energy Board

Sinhala (Sri Lanka)English (United Kingdom)
Get sinhala unicode font  Get tamil unicode font
Sitemap
FAQ Contact Us
முதற்பக்கம் எமது பணி பொது விஞ்ஞானப் பரிவு

பொது விஞ்ஞானப் பரிவு

பொது விஞ்ஞானப் பிரிவு ஆனது இரண்டாம் நியம அளவீடுகள் அணு கருவிப்படுத்தல்கள், தனிப்பட்ட கண்காணிப்பு சேவை, பொதுமக்கள் தகவல் அளிப்பு மற்றும் கணினிப்பு பிரயோகங்கள் என்பவற்றுடன் தொடர்புடைய செயற்பாடுகளுக்கு பொறுப்பாக உள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட இரண்டாம் நியமங்கள் அளவீட்டுக் கணிப்பீடு ஆய்வுகூடம்.

அறிமுகம்:

அணுசக்தி அதிகார சபையானது ஒரு வலுவுடைய இரண்டாம் நியமங்கள் அளவுக்கணிப்பீடு ஆய்வுகூடத்தை உரிய நியமங்களின் பராமரிப்புக்காகவும் நாட்டுக்குத் தேவையான அளவுக்கணிப்பீட்டு சேவைகளை வழங்குவதற்காகவும் நிறுவியது. பணியாட்கள், பொதுமக்கள் மற்றும் சூழலில் கதிர்வீச்சுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நாட்டில் கதிர்வீச்சுப் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டமானது அமுல்படுத்தப்படுவதற்காக கணிப்பீட்டு அளவீட்டு சேவைகள் அத்தியாவசியமாக உள்ளது.

கதிரியக்கம் பயன்படுத்தப்படும் எல்லா நிறுவனங்களிலும் தமது கதிரியக்க கண்காணிப்பு உபாயங்கள் மற்றும் கருவிகளின் கதிரியக்கத்தை கண்காணிப்பதற்கும் வேலையிடத்துக் கதிரியக்க பாதுகாப்பை உறுதிப்படுத்ததுவதற்கும் கதிரியக்க கணிப்பீட்டு சேவைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். கதிரியக்க சிகிச்சை உபகரணங்களின் கதிரியக்க வெளிப்பாடுகளின் செவ்வைத்தன்மையை உறுதிப்படுத்தும் பொருட்டு கணிப்பீட்டு அளவீட்டு சேவைகளைப் பெற்றுக் கொள்வது அவற்றிற்கு அவசியமாகவுள்ளது. கதிரியக்கம் மற்றும் கதிரியக்க சமதாணிகள் பயன்படுத்தப்படும் இடங்களில் நல்ல ஆய்வுகூட பழக்க  வழக்கங்களைக் கொண்டிருப்பதற்கு இச்சேவைகள் இட்டுச்செல்லும்.

சேவைகள் :

  • அம்பியன்ட் வழங்குகை அளவிடுகைக்காக கதிரியக்க கண்காணிப்புக் கருவிகளின் அளவீட்டுக் கருவிகளை வழங்குதல் / வீதம் / H*(10) இடத்திற்கு / வேலை இடத்திற்கு / சுற்றாடல் கண்காணிப்பு உபகரணங்கள்
  • தணிப்பட்ட ஆள் கொடுப்பு சமதையின் அளவீட்டுக்கான தனிப்பட்ட அளவீட்டுக் கருவிகளை வழங்கதல் / Hp (10).
  • எடுத்துச் செல்லக்கூடிய மேற்பரப்பு பழுதடையும் உபகரணங்களின் அளவீடுகளை வழங்குதல்.
  • Co-60  கதிர்வீச்சில் நீருக்கு உறிஞ்சப்படும் அளவின் சிகிச்சைமட்ட அளவீட்டலகின் அளவீடுகளை வழங்குதல்.

அளவீட்டு அலகு வசதி:

  • ஒரு காமா கதிர்வீச்சு Cs-137 மற்றும் Co-60 ஐ உள்ளடக்கியது,
  • X-கதிர் முறைமை பாதுகாப்பு மட்ட கதிர்தகைமைகளுக்கான ISO 4035 – ஒடுங்கிய புலத்தைக் கொண்டது.
  • அயன்மயமாகும் கூடங்களுடன் கூடிய அளவீட்டுக் கருவிகள் மற்றும் உசாவுகைகள்
  • அனைத்து அயன்மயமாகும் கூடங்களுக்கான விஸ்திரத்தன்மையை பரிசோதிக்கும் கூடங்கள்.
  • பெரிய இடஉசாவு மூலங்கள் (ISO வகைப்படுத்தல்: C.34645).

பாதுகாப்புமட்ட அளவீட்டுக் கணிப்பீட்டுச் செயன்முறை:

  • ICRP இனால் சிபாரிசு செய்யப்படும் புதிய நடவடிக்கை அளவுகளானவை வழங்கல் அளவு வீத மாணிகள் மற்றும் தனிப்பட்ட அளவீடுகளின் அளவுக் கணிப்பீட்டுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
  • தனிப்பட்ட கண்காணிப்பின் அளவுக்கணிப்பீட்டில் சம்பவ கதிர்வீச்சின் பின் பரவலானது தொடர்பானதுடன் மனித தோர்சோவை பிரதிநிதித்துவப் படுத்துவதற்கு பென்டம் (PMMA) 20x20x15 cm3 பயன்படுத்தப்படுகின்றது.
  • இட கண்காணிப்பு கருவிகள் அளவுக்கணிப்பீடுகள் என்பவை சுயாதீன வழியில் அளவிடப்படுகிறது. நிலமைகளுடன் தொடர்புடைய அளவிடல் காரணிகள் (அம்பியன்ட் வெப்பநிலை 200C, சூழல் அமுக்கம் 101.325kPa சராசரி ஈரப்பதன் 50%) என்பன பொருத்தமான இடங்களில் கொடுக்கப்படுகிறது.

பாதுகாப்பு மட்ட அளவிடல் சேவைகளை பெற்றுக் கொள்வது எவ்வாறு (கதிர்வீச்சின் அளவை கண்காணிக்ககும் கருவிகள்):

புதிய பட்டறிகள் இடப்பட்ட உபகரணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் அத்துடன் உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட அளவிடல் வேண்டுகோள் படிவங்கள் இரண்டு சமர்ப்பிக்கப்படல் வேண்டும். (படிவங்களை தரவிறக்கம் செய்க). முதல்தடவையில் அளவிடுவதற்காக புதிய உபகரணங்களின் கையேட்டின் ஒரு பிரதி வேண்டப்படலாம்.

  • பாதுகாப்புமட்ட அளவீட்டுக்கான ஏற்பாடுகள்:

கடிதம் அல்லது தொலை நகல்கள் மூலம் ஏலவே அளவிடலுக்கான ஏற்பாடுகள் செய்து கொள்ளப்படலாம். தொலைநகல்: 011 2533448, மின் அஞ்சல்: இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் , இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் அல்லது தொலைபேசி - 011 2533427-8.

  • சிகிச்சைமட்ட கணிய அளவிடல்

IAEA தொழில்நுட்ப அறிக்கை தொடரிலக்கம் 398 இன் பிரகாரம் நீருக்குள் உறிஞ்சப்பட்ட அளவு Co-60 கதிரின் சிகிச்சைமட்ட கணிய அளவீடு வழங்கப்படு வதன் அளவீடாகும்.

  • சிகிச்சைமட்ட கணிய அளவு சேவையை எவ்வாறு பெற்றுக் கொள்வது

உட்கூட்டு அளவீட்டிற்கான ஒரு திகதி மற்றும் சேவைக்கட்டணம் என்பன அ.ச.அ.விடமிருந்து பின்வரும் மின் அஞ்சல் முகவரிகள் ஊடாக அளவுக்கணிய வேண்டுகோள் படிவத்தை அனுப்புவதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.
மின் அஞ்சல்: இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் அல்லது இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

தனிப்பட்ட கண்காணிப்பு சேவை

கதிரியக்க பண்டங்கள் மற்றும் கதிரியக்க உபகரணங்களை பயன்படுத்தும் பயனாளர்கள் எல்லோரும் அணுசக்தி அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்ட தனிப்பட்ட கண்காணிப்பபு கருவிகளினால் அவற்றினை கண்காணிக்க வேண்டுமென அணுசக்தி ஒழுங்குவிதிகள் கட்டாயமாக்குகின்றது. பொது விஞ்ஞானப் பரிவினாது தீவுபூராகவும் வெப்ப ஒளிமுதல் அளவீட்டு மாணிகளை பயன்படுத்தி கதிர்வீச்சுப் பணியாளர்களின் தொழில் ரீதியான முகங்கொடுப்பைக் கட்டுப்படுத்துவதற்காக ஒரு தனிப்டபட்ட கண்காணிப்பு சேவையை வழங்குகின்றது.

தனிப்பட்ட கண்காணிப்பு சேவைக்கு தகுதியுடையவர்கள் யார்?

கதிர்வீச்சுப் பணியாளர் மொத்த உடல் கதிர்வீச்சு பெறுகை 20mSv, வருடாந்த வரையறையாக 1/3ஐ பெற்றுக்கொள்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது. அல்லது கதிர்வீச்சுப் பணியாளர் கதிர்வீச்சு பாதுகாப்பு பிரிவு அ.ச.அ.வினால் இவ்வாறு பெற்றுக் கொள்ள சிபாரிசு செய்யப்படுகிறார். (ஒழுங்கமைப்பு.)

தனிப்பட்ட கண்காணிப்பு சேவையை வேண்டிப் பெற்றுக் கொள்வதற்கான அறிவுறுத்தல்கள்:

ஒரு உத்தியோகபூர்வ வேண்டுகோள் விடுக்கப்படல் வேண்டும் (வேண்டுகோள் படிவம், அறிவுறுத்தல் தாள்கள்) அத்துடன் உரிய முறையில் கைச்சாத்திடப்பட்ட சுயவிபரக்கோவை படிவம் மற்றும் தனிப்பட்ட தரவுகள் படிவம். தொழில்நுட்ப விபரங்களுக்காக தனிப்பட்ட கண்காணிப்புச் சேவையின் கையேடு.

தரவிறக்கம் செய்யக்கூடிய ஆவணங்கள்:

  • அறிவுறுத்தல்களுடன் கூடிய தேவையான படிவங்கள்
  • ஒழுங்குவிதிகளின் உரிய பிரிவுகள்

தனிப்பட்ட கண்காணிப்பு சேவையை பெற்றுக் கொள்வதற்கான சேவைக் கட்டணங்களை அ.ச.அ.விடமிருந்து பின்வரும் மின் அஞ்சல் முகவரிகளுக்கு இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் அல்லது இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் அனுப்புவதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

அணு மின்னியல் கருவியாக்கல் பிரிவு

அறிமுகம்:

நாட்டிலே ஒரு நீடித்து நிலைக்கக்கூடிய அணு தொழில்நுட்ப நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அணு கருவியாக்கல் ஆதரவுச் சேவைகளை மிகச்சிறந்த முறையில் வழங்குதல்.

செயற்பாடுகள்:

  • அணு மின்னியல் உபகரணங்களை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு திருத்தல் மற்றும் பராமரிப்பு சேவைகளை வழங்குதல்.
  • அணு கருவியாக்கல் துறையில் பயிற்சிகளை வழங்குதல்.

(திருத்தவேலை பராமரிப்பு சேவைகளானவை கதிரியளக்க கண்காணிப்புகள், காமா எண்ணும் முறைமைகள் மற்றும் ஏனைய அணு பகுப்பாய்வு முறைமைகளுக்கு மாத்திரமே வரையறுக்கப்பட்டுள்ளது. ஒரு கருவியை அனுப்புவதற்கு முன்பதாக பிரிவுத்தலைவர் தொடர்பு கொள்ளவும்)

அணு தகவல் சேவைகள்:

  • நாட்டில் சமூக, பொருளாதார அபிவிருத்திக்காக தனித்துவமான தொழில் நுட்பத்தை இலங்கை சிவில் சமூகத்தின் பல்வேறுபட்ட துறைகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு அணுசக்தி பிரயோகங்கள் மீதான தகவல்களை வழங்குதல்.
  • அச்சு ஊடகம் மற்றும் இலத்திரனிய்ல் ஊடகங்களைப் பயன்படுத்துவதால் உயர் குலத்திடம் இருந்து அடிமட்ட மக்கள் வரையில் அணுத்தொழில் நுட்பத்தின் அமைதியான பிரயோகங்களை பிரபல்யப்படுத்துதல்.

அ.ச.அ. நூலகம்:

  • அ.ச.அ.வின் நூலகமானது முழுமையாக அணு தொழில் நுட்பம் தொடர்பான தகவல்களுக்காகவே உள்ளது. அது பெரும் எண்ணிக்கையிலான அணு தொழில் நுட்பம் மீதான சர்வதேச அணுசக்தி முகவர் மற்றும் வேறுபல ஊடகங்களால் பிரசுரிக்கப்படும் வெளியீடுகளை பெருமளவில் கொண்டுள்ளது.
  • கீழே குறிப்பிடப்பட்டுள்ள களங்களில் பிரசுரங்கள் கிடைக்கக்கூடியதாக உள்ளன. உசாவுகைக்காக வழங்கப்படுவதுடன் அல்லது நூலகங்களுக்கு இடையிலான கடன் அடிப்படையிலும் இரவல் கொடுக்கப்படும்.

சர்வதேச அணு தகவல் முறைமை (INIS): (மேலதிக தகவல்கள்: http://www.iaea.org/inisnkm/inis/aboutinis/overview.htm)

சர்வதேச அணு தகவல் முறைமை (INIS) என்பது ஒரு கணினி அடிப்படையிலான நூற்பட்டியல் தரவுத்தளம் ஆகும். இது சர்வதேச அணுசக்தி முகவராலயத்தால் அனுசரணை செய்யப்படுகின்றது. இந்த தரவுத்தளத்தில் புத்தகங்கள், ஆய்வறிக்கைகள், கட்டுரைகள், மகாநாட்டுப் பத்திரங்கள் உரிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் உறுப்பு நாடுகளனால் அவ்வாய்வுகளின் முடிவுரைகளாக அனுப்பப்பட்டவை போன்றவற்றை இத்தரவுத்தளம் கொண்டிருக்கின்றது. இது உசாத்துணையிலே தலைப்பு, எழுத்தாளர் பெயர், எங்கிருந்து பெறப்பட்டது என்ற மூலம், பிரசுரித்த ஆண்டு, மொழி, எடுக்கும் ISSN அல்லது ISBN என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.

INIS பல்கலைக்கழக நூலகங்களுக்கான அணுகல் கடவுச்சொல்லை IAEAயிடமிருந்து ஒழுங்கு செய்து கொள்ளலாம்.

கதிரியக்கம் போன்று நாங்களும் துடிப்பாக உள்ளோம்
தொடர்பு: திரு. சிறில் காசிகே, தலைவர்
மின் அஞ்சல்: இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்
தொலைபேசி:011 2534206, 2533427-8

 

திங்கட்கிழமை, 18 ஏப்ரல் 2016 09:36 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது