Sri Lanka Atomic Energy Board

Sinhala (Sri Lanka)English (United Kingdom)
Get sinhala unicode font  Get tamil unicode font
Sitemap
FAQ Contact Us

வரலாறு

இலங்கை அணுசக்தி அதிகாரசபையின் முக்கிய நிகழ்வுகள்

இலங்கை அரசாங்கத்தின் திட்டமிடல் சபையின் கீழ் 1957ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அணுசக்தி மீதான உப குழுவே அணுசக்தி அதிகார சபை (அ.ச.அ) நிறுவுகைக்கு இட்டுச்சென்ற முன்நிறுவனமாகும். அதேவருடத்திலேயே ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச அணுசக்தி முகவராலயம் (IAEA)யின் ஆரம்பகால உறுப்பினராக இலங்கை இணைந்து கொண்டது. 1950களின் பிற்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்த IAEA நிபுணர்களின் மதியுரையின் பிரகாரம் 1962ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக் கழகத்தில் கதிரியக்க சமதாணிகள் நிலையம் நிறுவப்பட்டது.

1969ஆம் ஆண்டு 19ஆம் இலக்க சட்டமூலம் அணுசக்தி அதிகார சபை நிறுவப்பட்டது. அ.ச.அ.வின் முதல் தவிசாளராக பேராசிரியர் P.P.G.L. சிறிவர்தன கொழும்பு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகவும் கதிரியக்க சமதாணி நிலையத்தின் பணிப்பாளராகவும் செயற்பட்டார். 1979 – 1989 காலப்பகுதியிலே  அ.ச.அ.வின் தவிசாளராக கலாநிதி கிறேன்வின் தர்மவர்தன செயற்பட்டதுடன் பேராசிரியர் சிறிவர்தன கொழும்பு பல்கலைக்கழக கதிரியக்க சமதாணி நிலையத்தின் பணிப்பாளராகவும் தொடர்ந்து பணியாற்றினார். இந்த 20 ஆண்டு காலப்பகுதியிலே அ.ச.அ. 35 பணியாளர்களைக் கொண்ட நிறுவனமாக விருத்தியடைந்ததுடன் இந்தப் பணியாளர்கள் 10 பேர் கதிரியக்க பாதுகாப்பு அழிவு ஏற்படுத்தாத பரீட்சிப்பு அணுமருந்து XRF பகுப்பு முறைகள், உணவு ஒளி கதிரியக்கம், கதிர்தாக்கத்தால் இறப்பரைப் பதப்படுத்தல் அணு மின்னியல் போன்றவற்றில் விசேடத்துவம் பெற்ற 10 பணியாளர்களையும் அது உள்ளடக்கியிருந்தது.

எவ்வாறாயினும் இந்த கட்டத்தில் கூட அ.ச.அ.வானது தனது சொந்த ஆய்வுகூட வசதிகளைக் கொண்டிருக்காமல் முறைசாரா அடிப்படையில் கதிரியக்க சமதாணிகளைப் பயன்படுத்தி வந்தது. அங்கே இருந்த மற்றுமொரு பின்னடைவு என்னவெனில் அதனுடைய விஞ்ஞான பணியாளர்களின் பலத்துடன் ஒப்பிடும் போது அ.ச.அ. சம்பந்தப்பட்டிருந்த தொழிற்பாடு விடயங்கள் அதிகரித்த எண்ணிக்கையாக இருந்ததாகும்.

கலாநிதி டக்லஸ் நெத்சிங்ஹ அவர்கள் IAEAயில் 25 ஆண்டுகள் சேவையாற்றி ஓய்வுபெற்றதன் பிற்பாடு 1989இல் இதன் தவிசாளராக நியமிக்கப்பட்டார். அவர் பணியாளர் / முகாமைத்துவம் உறவுமுறையை கணிசமான அளவு முன்னேற்றியதுடன் அ.ச.அ.விற்கு புதிய வழிப்படுத்தலையும் வழங்கினார். அச.அ.வுக்கு என ஒரு ஆய்வுகூட வசதியை ஏற்படுத்துவதற்கென ஒரு உறுதியான தீர்மானம் எடுக்கப்பட்டதுடன் அதன் எதிர்கால அபிவிருத்துக்கு என ஒரு கூட்டுத்திட்டமும் தயாரிக்கப்பட்டது. 1989களில் அ.ச.அ. ஈட்டிய வருமானம் 4,000 ரூபாவாக மாத்திரம் இருந்ததுடன் இது 1992ஆம் ஆண்டு கலாநிதி நெத்சிங்ஹ தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகியபோது  ரூ. 730,000 ஆக அதிகரித்திருந்தது.

1992இல் அ.ச.அ.வின் புதிய தவிசாளராக கலாநிதி. எம். பிரிநாத் டயஸ் அவர்கள் நியமிக்கப்பட்டதுடன் கலாநிதி நெத்சிங்ஹ அவர்களால் தொடக்கப்பட்ட அபிவிருத்திக்கான வேலை நிகழ்ச்சித்திட்டங்களை அவர் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றார். அ.ச.அ.விற்கான ஆய்வுகூட மற்றும் அலுவலக நிர்மாணத்திற்கான நிதி அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்டதுடன் அ.ச.அ.வை 5 புதிய பிரிவுகளாக பிரிக்கும் நிறுவனக் கட்டமைப்புக்கான முன்னேற்ற ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. விஞ்ஞான ரீதியான நிகழ்ச்சித்திட்டங்களும் கணிசமாக ஆராயப்பட்டது. 2001ஆம் ஆண்டளவில் அ.ச.அ.வினால் ஈட்டப்பட்ட வருமானமானது 6 மில்லியனாக அதிகரித்தது. அத்துடன் பணியாளர் எண்ணிக்கையானது 70ஆக அதிகரித்ததுடன் அவற்றுள் 30 பணியாளர்கள் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ரீதியான பணியாளர்களாக இருந்தனர்.

அச.அ.வின் புதிய கட்டிடத்திற்கான நிர்மாண சேவைகள் 2001இல் பூர்த்தியடைந்த துடன் கதிரியக்க தொழிலாளர்களின் வெளிப்புற கண்காணிப்பு, அணுமின்னியல் உபகரணங்களின் பரிபாலிப்பு மற்றும் அளவிடுகை, அழிவு ஏற்படாத பரீட்சிப்புகள், கதிரியக்க செயன்முறை, கதிர் புளோசன்ட் பகுப்பாய்வு, கதிரியக்கச் சென்முறை மற்றும் அணுவழித்தட பிரயோகங்கள் என்பவற்றுக்கான ஆய்வுகூட வசதிகளும் நிறுவப்பட்டது.

2002 ஓகஸ்ட் 26 ஆம் திகதி அ.ச.அ.வின் புதுக்கட்டிடமானது உத்தியோகபூர்வமாக ஆதர் சி. கிளாக் ஐயா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. ஆய்வு மற்றும் அபிவிருத்தி நோக்கங்களுக்காக IAEA யிடமிருந்து ஒரு காமா கூட்டைப் பெற்றுக் கொண்டது.

பேராசிரியர் எம். பிரிநாத் டயஸ் IAEA யின் கிழக்காசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்தின் பிராந்திய ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டதுடன், அவர் தவிசாளர் பதவியிலிருந்து விலகிக் கொண்டார். பேராசிரியர் ஆர். ஹேவமானா அ.சஅ.வின் தவிசாளராக 2003 மேயில் நியமிக்கப்பட்டார். IAEAயிடமிருந்து பெற்றுக்கொள்ளப் பட்ட காமா கூடானது நிறுவப்பட்டதுடன் ஒரு பல்நோக்கு காமா ஒளிக்கதிர்வீச்சை நிறுவுவதற்காக விஞ்ஞான மற்றும் தொழில் நுட்பவியல் அமைச்சிடம் 2004ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது. இந்நோக்கத்திற்காக அரசாங்கமானது 102 மில்லியன்களை ஒதுக்கியது.

2004 நவம்பரில் பேராசிரயர் ஹேவமானா பதவி விலகியதுடன் பேராசிரியர் B.M.A. ஒஸ்வின் பெரேரா 2006 மார்ச் 06 ஆம் திகதி தவிசாளராக கடமையைப் பொறுப் பேற்றுக் கொண்டார். அவரது காலப்பகுதியின் பொழுது உணவு மற்றும் மண்ணிற்கான காமா ஸ்பெற்றஸ்கொப்பி பகுப்பாய்வுகளுக்கான தேசிய அங்கீகாரத்தை அ.ச.அ.வின் அணுப்பகுப்பாய்வூகூடம் பெற்றுக் கொண்டது. பேராசிரியர் B.M.A. ஒஸ்வின் பெரேரா 2007 மார்ச்சில் பதவி விலகினார்.

1956 இருந்து 1965 வரை

1956

தேசிய திட்டமிடல் சபையால் அணுசக்தி மீதான ஒரு தொழில்நுட்ப வேலை பணிக்குழு நியமிக்கப்படுதல்.

1957

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் சர்வதேச அணுசக்தி முகராண்மையின் ஆரம்பகால உறுப்புரிமை தொடர்தல். (IAEA)

1958

IAEA நிபுணர் குழுவினர் அரசாங்கத்திற்கு அணுத்தொழில் நுட்பத்தின் நிகழ்ச்சித்திட்டம் குறித்து விரிவுரை வழங்கல்.

1961

பேராசியர் P.P.G.L. சிறிவர்தனவின் வழிகாட்டலின் கீழ் மேற்படி குழுவின் சிபாரிசுகளின் பிரகாரம் கொழும்பு பல்கலைக்கழக கதிரியக்க சமதாணி நிலையத்தினை நிறுவியதுடன் பட்டதாரி மற்றும் பட்டப்பின்படிப்பு கற்பித்தல் நிகழ்ச்சித்திட்டங்களையும் ஆரம்பித்தல்.

1962

IAEA யின் உதவியுடன் மருத்துவ விவசாய கைத்தொழில் துறைகளில் அணுசக்தியை பயன்படுத்துவதற்காக தேசிய நிறுவனங்களுக்குள் தொழில் நுட்பத்ததை மாற்றுவதற்கு ஆரம்பித்தல்.

 

1965  இருந்து 1975 வரை

1969

1969ஆம் ஆண்டு 19ஆம் இலக்க அணுசக்தி அதிகாரசபை சட்டத்தின் கீழ் பாராளுமன்றத்தினால் அணுசக்தி அதிகாரசபை நிறுவுவதற்கு அங்கீகாரம் கிடைத்தது.

1970

போராசிரியர் P.P.G.L. சிறிவர்தன முதல் தவிசாளராக நியமிக்கப்பட்டு அணுசக்தி அதிகாரசபை நிறுவப்பட்டது.

1975

கதிரியக்க சமதாணிகளின் பயன்பாடுகளை ஒழுங்கு படுத்துவதற்காக அணுசக்தி ஒழுங்குவிதிகள் ஸ்பெற்றஸ்கொப்பி யுடன் IAEAயின் பிராந்திய ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இலங்கை அங்கத்துவம் பெற்றுக் கொண்டது.

 

1976 இருந்து 1985 வரை

1979

அ.ச.அ.வின் தவிசாளராக கலாநிதி. K.G. தர்மவர்தன நியமிக்கப்பட்ட துடன் கதிரியக்க சமதாணி நிலையத்தின் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.

1983

மருத்துவ நோய் கண்டுபிடிப்பு சேவைகளை வழங்குவதற்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு ஒரு அணு உருவமைப்பு அலகு நிறுவப்படுதல்

1984

IAEAயின் உதவியுடன் கதிரியக்க சமதாணி நிலையத்தில் அணு  விஞ்ஞானத்தில் ஒரு முதுமாணி நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்படுதல்.

 

 

1986 இலிருந்து 1995 வரை

1986

மருத்துவ நோய் கண்டுபிடிப்புச் சேவைகளை வழங்குவதற்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கதிரியக்க நோய் எதிர்ப்பு ஆய்வு கூடம் நிறுவப்படுதல்.

1989

அ.ச.அ.வின் தவிசாளராக கலாநிதி. D.A. நெத்சிங்ஹ நியமிக்கப்படுதல்.

1990

அ.சஅ.வுக்காக அதனுடைய சொந்த ஆய்வுகூடத்தை நிறுவுவதற்கான தீர்மானத்தை மேற்கொள்ளல். மற்றும் அதற்கான ஒரு கூட்டுத்திட்டம் ஒன்றுக்கான தயார்படுத்துகை. கதிர்வீச்சு பணியாளர்களுக்கான ஒரு தனிப்பட்ட கண்காணிப்பு சேவை ஆரம்பிப்பு. கதிர்வீச்சுப் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டத்தை தரமுயர்த்துவதற்கான நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்தல். அழிவைத்தராத பரீட்சிப்பு, கதிர்வீச்சு பாதுகாப்பு மற்றும் இலத்திரனியல் என்பவற்றில் அ.ச.அ.வினால் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் ஆரம்பிக்கப் படுதல்.

1992

அ.ச.அ.வின் தவிசாளராக கலாநிதி M. பிரிநாத் டயஸ் நியமிகக்ப்படுதல்.

1993

அ.ச.அ.விற்காக அலுவலக மற்றும் ஆய்வுகூட வசதிகளைக் கொண்ட கட்டிட நிர்மாணத்திற்கான முன்மொழிவு அபிவிருத்திச் செயலாளர் குழுவால் அங்கீகரிக்கப்படுதல்.

1994

அ.ச.அ.வினால் அழிவை ஏற்படுத்தாத பரீட்சிப்பு சேவைகள் ஆரம்பிக்கப்படுதல்.

1995

அ.ச.அ.வில் காமா ஸ்பெஸ்ட்ரோகொபிக் பகுப்பாய்வுச் சேவைகளை வழங்குவது ஆரம்பிக்கப்படுதல். அ.ச.அ.வில் அணு இலத்திரனியல் உபகரணங்களை பராமரித்தல் மற்றும் அளவையிடல் சேவைகள் ஆரம்பிக்கப்படுதல். அ.ச.அ. கட்டிட நிர்மாண கருத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தல்.

 

1996 இருந்து 2005 வரை

1996

நான்கு விஞ்ஞான பிரிவுகளையும் இரண்டு நிர்வாகப் பரிவுகளையும் உள்ளடக்கிய புதிய நிறுவனக் கட்டமைப்பு ஒன்று அ.ச.அ.வில் உருவாக்கப்படுதல். IAEAயின் உதவியுடன் இலங்கை கண்தானச் சங்கத்தால் ஒரு மனித தசைநார் வங்கி நிறுவப்படுதல்.

1997

அ.ச.அ. கட்டிடக் கருத்திட்டம் ஆரம்பிக்கப்படுதல்.

2000

அ.ச.அ.வின் அடிப்படை பாதுகாப்பு நியமங்களை உறுதிப்படுத்தும் கதிரியக்க பாதுகாப்பு ஒழுங்கு விதிகளை உறுதிப்படுத்துவதை பரப்புதல். 1999ஆம் ஆண்டு 1ஆம் இலக்க அணுசக்திப் பாதுகாப்பு ஒழுங்கு விதிகளின் அயன் மயமாக்கப்பட்ட கதிரியக்க பாதுகாப்பு மீதான ஒழுங்கு விதிகள் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது.

2001

அ.ச.அ.வின் வருடாந்த வருமானம் 6 மில்லியன் ரூபாய்களாக அதிகரித்ததுடன் பணியாளர்களின் எண்ணிக்கை 70 ஆகவும் அதிகரித்தது. அ.ச.அ.வின் புதிக கட்டிடத்தில் ஆய்வுகூட வசதிகள் மற்றும் நிர்வாக கட்டிடத் தொகுதி என்பன நிர்மாணம் பூர்த்தியாகியது.

2003

கொழும்பு சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையில் அணு உருவமைத்தல் அலகு நிறுவப்படுதல். IAEAயின் பிராந்திய ஒருங்கிணைப்பாளராக பேராசியர் M. பிரிநாத் டயஸ் நியமிக்கப்படுவதுடன் அ.ச.அ.வின் தவிசாளர் பதவியில் இருந்து அவர் விலகுதலும். பேராசிரியர் R. ஹேவமான அ.ச.அவின் தவிசாளராக நியமிக்கப்படுதல். கால்நடை, கோழி என்பவற்றில் இருந்தான உணவு உற்பத்திகளில் இரசாயனப் பொருள் மருந்து மிகுதிகளை அணுத்தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இனங்காண்பதற்காக பேராதனை பல்கலைக்கழக மிருக வைத்தியம் மற்றும் மிருகவிஞ்ஞான பீடத்தில் ஒரு அலகினை நிறுவுதல். புதிய கட்டிடத்தில் காமா கூட்டினை நிறுவுதல். அ.ச.அ.வில் ஒரு வர்த்தக அபிவிருத்தி அலகினை நிறுவுதல்.

2005

பலநோக்கு காமா ஒளிக்கதிர்வீச்சு வசதியை அமைப்பதற்காக இலங்கை அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கப்படுதல். பேராசிரியர் R. ஹேவமானா தவிசாளர் பதவியில் இருந்து விலகுதல்.

 

2006 இருந்து இற்றைவரைக்கும்

2006

பேராசிரியர் B.M.A. ஒஸ்வின் பெரேரா தவிசாளராக நியமிக்கப்படுதல். (மார்ச் 2006 – 2007 மார்ச்)
உணவு மற்றும் மண் குறித்த காமா ஸ்பெட்ரோஸ்கொபியின் பகுப்பாய்விற்காக அ.ச.அ.வின் அணுப்பகுப்பாய்வு கூடமானது தேசிய அங்கீகாரத்தை பெற்றுக் கொண்டமை .

2007

அ.ச.அ.வின் தவிசாளராக கலாநிதி. W. அபேவிக்ரம நியமிக்கப்படுதல்.

2009

அணுசக்தி அதிகார சபையானது ஒரு ஏற்று அங்கீகரிக்கப்பட்ட இரண்டாந்தர டொசிமெட்ரி அளவீட்டு ஆய்வு கூடத்தை நிறுவியது.

2009

கதிரியக்கத்திற்கு உட்பட்டவர்களையும் மற்றும் புது நோயுடைய தனிநபர்களையும் கண்டுபிடிப்பதற்கான உயிரியல் டொஸிமெட்ரி ஆய்வுகூட வசதிகளை நிறுவது மீதான ஒரு கருத்திட்டத்தை ஆரம்பித்தல்.
கதிரியல் அவசர நிலைமைகளுக்கு பதிற்செயற்பாடு ஆற்றுவதற்கு உரிய தேசிய இயலுமையை விருத்தி செய்வதன் மீதான ஒரு கருத்திட்டமானது 2009 இல் ஆரம்பிக்கப்பட்டது.

2009

TXRF தொழில்நுட்பம் நிறுவப்பட்டது.

2010

விஞ்ஞான மற்றும் தொழில் நுட்ப அமைச்சின் கீழ் தொழிற்பட்டு வந்த அ.ச.அ.வானது சக்தி வலு மற்றும் சக்தி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது. அமைச்சர் கௌரவ. பாட்டலி சம்பிக ரணவக்க.

2010

இரண்டு தசாப்தங்களுக்கு பிற்பாடு அரசாங்கமானது மின்சார உருவாக்கத்திற்காக அணுசக்தியைப் பயன்படுத்துவது தொடர்பான ஒரு தீர்மானத்திற்கு வந்ததன் பின்னர் இந்த இலக்கை சாதிப்பதற்கான மனித சக்தி பயிற்சியும் ஆரம்பிக்கப்பட்டது.

2010

அழிவை ஏற்படுத்தாத பரீட்சிப்பதற்காக ஒரு தேசிய நிலையத்தை நிறுவுவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டதுடன் இந் நோக்கத்திற்காக ஒரு காணித்துண்டும் தரப்பட்டது.

வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015 11:44 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது